
9/11 தாக்குதல் நடந்ததிலிருந்து அதில் தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு கவுன்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 779 பேரில் பலரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் தயாரித்துள்ள ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது. கைதிகள் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாயின.
ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தின் போது தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டத்திற்கு புறம்பான இந்த சிறையை மூடுவேன் என பாரக் ஒபாமா வாக்களித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் இன்னமும் நிறைவேற்றவில்லை. இவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும் இன்னமும் 172 பேர் அச்சிறையில் உள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிலவற்றை ஏற்கனவே த கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நாளிதழ்கள் விக்கிலீக்ஸிடமிருந்து பெற்று வெளியிட்டுள்ளன.
No comments:
Post a Comment