Saturday, 28 May 2011

ஒரு ஒப்பீடும்; ஒரு இரங்கலும்; இஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்!


அரசியலில் பங்கெடுக்கும் முஸ்லிம்கள் நாளடைவில் தேர்ந்த அரசியல்வாதிகளாகவே மாறிவிடுவதை பார்க்கிறோம். இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலும் அவர்களை நாம கண்டுகொள்வதில்லை. ஆனாலும் அவர்களது செயல் இஸ்லாத்திற்கு முரணாக அமையும்போது சக சகோதரன் என்ற அடிப்படையில் சுட்டிக்கட்டவேண்டும் என்பதற்காக சமீபத்திய இரு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தடுமாற்றத்தை இங்கே பதிவு செய்கிறோம். 

ஜெயலலிதாவின் முந்தைய  அட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. இவர் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். நாமறிந்தவரை அவைகளில் ஒன்றிற்கு கூட இஸ்லாமிய பெயர்கள் இல்லை. மாறாக அவரது தலைவர் எம்.ஜி.ஆர் பெயரையே சூட்டியுள்ளார். சரி! அது அவரது விருப்பம். இத்தகைய இவரது கல்வியகத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்,

''எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இறைவன் தன்னுடைய படைப்புகளில் வேறுபாடு காண்பதில்லை. அதேபோல ஆசிரியர்கள் மாணவர்களை வேறுபடுத்தி பார்க்காமல் எல்லோரையும் ஒரே கண்டோட்டத்துடன் அணுகவேண்டும்' என்று பேசியுள்ளார்.  

ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்பதை தவிர இவரது பேச்சின் முற்பகுதியும் பிற்பகுதியும் சரியானதுதான்.  எழுத்தை அறிவித்தவன் இறைவன் தான் என்பதில் எந்த மாற்றமுமில்லை. அதுமட்டுமன்றி ''அவனே எழுதுகோலை கொண்டு கற்றுத் தந்தான்'' என்றும் குர்'ஆன் கூறுகிறது. அதற்காக இன்றைக்கு எழுதுகோலை கொண்டு கற்றுத்தரும் அனைவரும் இறைவனுக்கு சமமாகி விடமுடியுமா? ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் எனில், அவர்களை சுற்றி பாலியல் குற்றச்சாட்டுகளும், மோசடிகளும் பக்கம் பக்கமாக பத்திரிக்கைகளில் வெளியாகிறதே! இவர்கள் இறைவனுக்கு சமமானவர்கள் என்றால் இறைவனும் இதுபோன்ற தேவையுள்ளவன் என்று கருதுகிறாரா அன்வர்ராஜா? இறைவனுக்கு சமமாக எவரும் எந்த விசயத்திலும் ஒப்பாக முடியாது என்று அதாவது ''அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  'என்று ஒற்றைவரியில் நெற்றிப்  பொட்டில் அடித்தது போல்  திருமறை குர்'ஆன் கூறுவதை மறந்து விட்டாரா அன்வர்ராஜா? எனவே இனியாவது இறைவனோடு எவரையும் ஒப்பிட்டு பேசும் குணத்தை மாற்றிக் கொள்ளட்டும்.

அடுத்து, சமீபத்தில் மறைந்த பிரபல சாமியார்; அல்ல அல்ல சாமியார் என்பதை விட தன்னை கடவுள் என்றும் கடவுளின் அவதாரம் என்றும் கூறிக் கொண்ட சாய்பாபா என்பவர் மரணித்தார். எல்லா மனிதர்களும் மரணிப்ப்பவர்களே; அந்த வரிசையில் சாய்பாபா ஒரு சாமான்ய மனிதர் எனவே மரணித்து விட்டார். அவரது மரணத்தை கொண்டு நாம் மகிழவோ, வருந்தவோ எதுவுமில்லை. ஆனால் தன்னை சிறுவயது முதல் ஏகத்துவ சிந்தனையில் வளர்ந்ததாக கூறிக் கொள்ளும் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எனும் அரசியவாதி, சாய்பாபா மறைவுக்காக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

''இந்து சமய ஆன்மீக வாதியும் சமூக சேவகருமான புட்டபர்த்தி சாய்பாபாவின் மறைவால் வாடும் அவரது பக்தர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓரிடத்திலும், சாய்பாபாவின் மறைவினால் வாடும் அவரது பக்தர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று மற்றொரு இடத்திலும் கூறியதோடு,  சாய்பாவை சிறந்த சமூக சேவகராகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார் ஜவாஹிருல்லாஹ். 

சாய்பாபா எந்த வகை ஆன்மீகப்[?]பனியால் பக்தர்களை உலகெங்கிலும் உருவாக்கினார் என்று ஜவாஹிருல்லாஹ் அறியாததா? இறைவனுக்கு இணைவைத்த நிலையில் மரணிக்கும் எவருக்கும் இஸ்லாத்தில் மன்னிப்பில்லை என்ற கொள்கையை உணர்ந்த ஜவாஹிருல்லாஹ், தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறியவரின் இறப்பிற்காக கடலளவு கண்ணீர் உகுப்பது ஏன்? சாய்பாபாவின் மறைவிற்கு கருணாநிதி-ஜெயலலிதா-விஜயகாந்த்-தங்கபாலு-பொன்.ராதாகிருஷ்ணனுக்கு அடுத்தபடியாக அறிக்கை விட்டு, தன்னை முன்னணி  அரசியல்வாதிகளில் ஒருவராக காட்டியுள்ளார் ஜவாஹிருல்லாஹ். நாத்திக கொள்கையுடைய கி.வீரமணி கூட தனது கொள்கை உறுதியால் சாய்பபவிற்கு இரங்கல் தெரிவிக்காத நிலையில், ஜெயலலிதாவிற்கு அடுத்து விரைவாக அறிக்கை வெளியிட்டதன் நோக்கம் இதிலும் அம்மாவின் மனம் குளிர செய்யும் நோக்கமா? அல்லது இப்படியெல்லாம் அனைத்தையும்  சரிகண்டால்தான் அரசியலில் காலம் தள்ளமுடியும் என்ற முன்னேற்பாடா? கி.வீரமணிக்கு உள்ள கொள்கை உறுதி கூட, ஜவாஹிருல்லாஹ்விற்கு  இல்லையே என்பதை என்னும்போது, இவரைப் போன்ற கல்வியாளர்கள்  அரசியலுக்கு சென்றால் அரசியல் பண்படும்; சமுதாயம் பயன்பெறும் என்ற நம்பிக்கை தவிடுபொடியாகி விட்டதோ என்ற எண்ணம் இவருக்கு வாக்களித்த மக்களுக்கு ஏற்படுவதற்குள் ஜவாஹிருல்லாஹ் தன்னை சீர்திருத்திக் கொள்வது நல்லது.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட்

Friday, 27 May 2011

பேரணாம்பட்டில் முதியோருக்கு உதவி தொகை கிடைப்பதில் காலதாமதம்

                               குடியாத்தம் தொகுதிக்கு உட்பட்ட பேரணாம்பட்டில் முதியோர் உதவித் தொகையை முன்னுக்கு பின் முரணாக காலதாமதமாக அனுப்புவதால் தமிழக  அரசின் உதவித்தொகையை பெரும் முதியோர், உடல் உணமுற்றோர் மற்றும் விதவைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மார்ச் மாதம் கிடைக்கவேண்டிய உதவித்தொகை பெரும்பலனனோருக்கு அனுப்பப்படாமல் ஏப்ரல் மாதத்துக்கான உதவித்தொகை மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளனர். இதைபற்றி சம்பத்தப்பட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மார்ச்மாதத்துக்கான உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியோர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர் 
- அப்துல்லாஹ்

Wednesday, 25 May 2011

கல்வி உதவிக்கான சமுதாய அமைப்புகள்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சமுதாய மாணவ சொந்தங்களே! ப்ளஸ்டூ தேர்வில் வெற்றி பெற்று கல்லூரிக்கு செல்ல தயாராக இருக்கும் நீங்கள், இன்றைய மேற்படிப்பிற்கான கல்விச் செலவை நினைத்து கவலை கொள்கிறீர்கள். உங்கள் குடும்பப் பொருளாதார சுமையால் மேற்படிப்பு எண்ணம் கனவாகி போகுமோ என கவலை கொள்ளாதீர்கள்.
கீழ்காணும் நம் சமுதாய அமைப்புகள் உங்களது கல்வி செலவை ஏற்க தயாராக இருக்கின்றன. அவைகளை தொடர்பு கொண்டு உங்கள் மேற்படிப்பை வெற்றிகரமாக முடிக்கவும். நீங்கள் பெறும் பட்டத்தினை கொண்டு சமுதாயம் பயன் பெறவோம் துஆச் செய்கின்றோம்.
மனித வள மேம்பாட்டு அமைப்பு (HRDO)
C/o.கீழக்கரை கல்வி தர்ம அறக்கட்டளை
முஸ்லிம் பஜார், கீழக்கரை - 623517
இராமநாதபுரம் மாவட்டம்.
ஹஸன் அலி (9443503554)

Monday, 16 May 2011

நடந்து முடிந்த சட்டமன்றங்களில் நுழையும் முஸ்லிம் உறுப்பினர்கள்!

கடந்த மாதம் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் மூலம் 130 முஸ்லிமகள் சட்டமன்றத்திற்குள் நுழைகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.
34 வருட கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்து, புது புரட்சியினை ஏற்படுத்தியுள்ள மேற்கு வங்காளத்தில் அதிக பட்சமாக 59 முஸ்லிம் உறுப்பினர்களும், கேரளாவில் 36 பேரும், அஸ்ஸாமில் 28 பேரும் தமிழ்நாட்டில் 6 பேரும், பாண்டிச்சேரியில் 1 நபரும் சட்டமன்றத்திற்குள் நுழைக்கின்றனர்.

ஜெயலலிதாவின் பதவியேற்வு விழாவை இதஜ புறக்கணித்து!

          நடந்து முடிந்த தேர்தலில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து அதற்காக தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தையும் இன்று நடைபெற்ற பதவி ஏற்பு விழாவிற்கு அதிமுக அழைத்திருந்தது. ஆனால், அதில் முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்த நரேந்திர மோடி பங்கேற்ற காரணத்தால் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர்கள் S.M.பாக்கர் மற்றும் முனீர் ஆகியோர் இந்த நிகழச்சியினை புறக்கணித்தனர்.
ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிரான ஆட்சிக்காகதான் அதிமுகவை தேர்தலுக்காக ஆதரித்தது இதஜ. அதற்காக கொள்கையை ஒருபோதும் சமரசம் செய்யாது என்பதை நிரூபித்துள்ளது. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.
அவ்வாறே முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் நுழைய உள்ள அதிமுகவின் தோழமை கட்சியான மமகவும் இந்த பதவியேற்வு விழாவை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Friday, 13 May 2011

பேர்ணாம்பட்டு INTJ வின் மனமார்ந்த நன்றி

                     2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆ.இ.அ.தி.மு. க. வின் கூட்டணியை (203/234) பெருவாரியான தொகுதி வித்தியாசத்தில் வெற்றி பெறசெய்த தமிழக வாக்கள பெருமக்களுக்கு பேர்ணாம்பட்டு INTJ வின் மனமார்ந்த நன்றி., மற்றும் வரலாறு காணாத அளவிற்க்கு செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்க்கும் எங்களுடைய நன்றியை தெரிவித்துக்கோள்கிறோம்..


2011 தமிழக சட்டமன்ற தேர்தலின் 234 தொகுதிகளின்  முடிஉகள்  தெரிந்து கொள்ள
(தொகுதி எண்/ தொகுதி/ வெற்றி வேட்பாளர் / வாக்கு வித்தியாசம் ) 

Friday, 6 May 2011

தமிழகத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை 23% அதிகரிப்பு

தமிழகத்த்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை முந்தைய ஆண்டைவிட 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் மார்ச் 31 வரையில் 75 லட்சம் பயணிகள் வருகைபுரிந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநர் மோகன்தாஸ், "பயண¤களில் பெரும்பாலானவர்கள் மருத்துவம் மற்றும் ஆன¢மிகம் தொடர்பாக தமிழ்நாட்டுக்கு வருகைதருகின்றனர். அதேபோல தொழில்ரீதியாகவும் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. அவர்கள் குடும்பத்தினரை சுற்றுலாத் தலங்களை சுற்றிப்பார்க்க அழைத்து ருகின்றனர்" என்கிறார். வெளிநாட்டுப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டு 2.04 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு அது 2.1 சதவிகிதமாக உயரர்ந்துள்ளதாக சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 25 முக்கியமான சுற்றுலாத் தலங்களுக்கு அதிகமான பயணிகள் வருவதாக கண்டறிந்துள்ளனர். சென்னைக்கு மட்டும் 8,30,620 உள்நாட்டுப் பயணிகள் வருகைதந்துள்ளனர். அதற்கடுத்த இடத்தை மதுரை நகரம் பெறுகிறது.

கவுன்டனாமோ பே சிறைக்கைதிகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது

         கவுன்டனாமோ பே சிறைக்கைதிகள் பற்றிய ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது
9/11 தாக்குதல் நடந்ததிலிருந்து அதில்  தொடர்புடையவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்டு உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து, ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து கைது செய்யப்பட்டு கவுன்டனாமோ பே சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 779 பேரில் பலரைப் பற்றி அமெரிக்க உளவு நிறுவனங்கள் தயாரித்துள்ள ரகசிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வலைதளம் வெளியிட்டுள்ளது. கைதிகள் பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாயின.


ஜனாதிபதி தேர்தலின் பிரச்சாரத்தின் போது தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் சட்டத்திற்கு புறம்பான இந்த சிறையை மூடுவேன் என பாரக் ஒபாமா வாக்களித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதியை அவர் இன்னமும் நிறைவேற்றவில்லை. இவர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும் இன்னமும் 172 பேர் அச்சிறையில் உள்ளனர். விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்களில் சிலவற்றை ஏற்கனவே த கார்டியன், நியூ யார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் ஆகிய நாளிதழ்கள் விக்கிலீக்ஸிடமிருந்து பெற்று வெளியிட்டுள்ளன.

உஸாமாவுக்கு துஆ செய்வது ஏன்?

பிரபல இஸ்லாமிய அறிஞர்களில் ஒருவரான இலங்கையைச் சேர்ந்த முபாரக் மதனி அவர்கள், உலக முஸ்லிம்களின் நல்வாழ்விற்காக அரும் பாடுப்பட்ட இஸ்லாமிய போராளி உஸாமா பின் லாதீன் அவர்களுக்கு காய்பு ஜனாஸா தொழுகை நடத்துவதின் அவசியம் குறித்து விளக்குகிறார்கள்.