Sunday, 12 June 2011

சகோதர சண்டைக்கு சட்டமன்ற முற்றுகை ஏன்?


கடந்த சில நாட்களாக ஒரு குறுஞ்செய்தி ஒன்று மொபைல்களில் உலா
வருகின்றது!


விஷயம் இதுதான்................."
உணர்வு அலுவலகத்தை ம.ம.க,கட்சியினர் கைப்பற்றி விட்டதாகவும், அதை மீட்க சட்டமன்ற முற்றுகைஎனவும் ,அணிதிரளுங்கள் என அந்த செய்தி கூறுகின்றது."



  • சேலத்தில் அல்தாபி தாக்கப்பட்டதற்கு சட்டமன்ற முற்றுகை!.


  • எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் பிரச்சினைக்கு முதல்வர் வீடு

முற்றுகை!

இதுவெல்லாம் சமுதாயத்திற்கான பிரச்சினைகளா?தனி நபர்கள் சார்ந்தவகளா?
சகோதரர்களுக்குள் நடக்கும்சண்டைக்கு சட்டமன்ற முற்றுகை ஏன்?



அப்படியே முற்றுகை எனில் வட மரைக்காயர் தெருவில் உள்ள த.மு.,மு.க
அலுவலகத்தை அல்லவா முற்றுகை இட வேண்டும்.



தமிழத்தில் பெரும் படைஎம்மிடம் உள்ளது என பல மேடைகளில் பேசிவரும்
அண்ணனே,


அந்த பள்ளிவாசலை மீட்டோம்!இந்த பள்ளிவாசலை மீட்டோம்!
என்று கூறும் நீங்கள்,உணர்வு அலுவலகத்தை மீட்க,



இவ்வளவு காலமும் ஒரே எஸ்.எம்.எஸ்ஸில் பத்தாயிரம் பேரை கூட்டாதது ஏன்?



(இவ்வளவு காலமும்திறந்தா இருந்தது,பூட்டி தானே இருந்தது,பூட்டி இருந்ததை
பூட்டினார்கள் என முற்றுகை ஏன் என மக்கள் கேட்கிறார்கள்!)
மேலப்பாளையம்,திருச்சி சிங்கார தோப்பு,கடையனல்லூர் என ஜாக் அமைப்பிற்க்கு சொந்தமான பள்ளிவாசல்களையும் ,
எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசலையும் அபகரித்த அண்ணன் ஜமா அத்திற்க்கு



[மேலே குறிப்பிட்ட பள்ளிவாசல்களை அபகரித்தது உண்மைதான் ,என அண்ணனே ஒப்புக்கொள்ளும் அதிர்ச்சி வீடியோ காணஇங்கு கிளிக் செய்யுங்கள்]] அல்லாஹ் வைத்த ஆப்புதான் இது!!!

"முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும்"


என்பதற்கேற்ப,நடந்த இந்த படிப்பினை! அண்ணனும்,அண்ணனின் ஜமா அத்தும் திருந்துவார்களா????????


(அண்ணனிடம் பயிற்சி பெற்றவர்கள்,அண்ணனை போலவே நடந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது!!)

பொய்யர்கள் வெளியிட்ட போர்ஜரி கடிதத்திற்கு விளக்கம்!

அன்பிற்கினிய இணைய தள வாசகர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும் !
கடந்த சில நாட்களாக குடும்பத்துடன் உம்ரா சென்று இருந்ததால் செய்திகள் மற்றும் ஆக்கங்கள் வெளியிட முடியாமல் போனது , மேலும் உம்ரா சென்று விட்டு கடந்த 16.5.11 அன்று திரும்பி விட்டாலும் கூட செய்திகள் வெளியிட முடியாததற்கு காரணம் எனது மாமனார் கீழே விழுந்து கால் முறிந்து அறுவை சிகிச்சை செய்து படுத்த படுக்கையாக இருந்ததால், அவரை பார்ப்பதற்காக சொந்த வூர் சென்று குடும்பத்தோடு தங்க நேரிட்டதாலும் , நமது தளத்தில் செய்திகள் வெளியிட முடிய வில்லை.
இதை பயன் படுத்தி அவதூறு ஜமாத்தினர் தங்களின் போய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். எஸ்.எம் பாக்கருக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு என்றும் , அவர் என்னை இயக்கத்தை விட்டு வெளியேற்ற சதி செய்வதாகவும் , நான் கருத்து வேறுபாட்டால் எஸ்.எம்.பாக்கருக்கு கடிதம் எழுதியது போல் பொய்யாக ஒரு கடிதத்தை எழுதியதோடு போர்ஜரியாக எனது கை எழுத்தையும் போட்டுள்ளனர்.
போலி கை எழுத்து போடுவதை பிழைப்பாக கொண்டவர்கள் என் கை எழுத்தையாவது, த.த.ஜ.வில் உள்ள பழைய ஆவணங்களில் பார்த்து ஒழுங்காக போட்டிருக்கலாம்! என்ன செய்வது இ.த.ஜ.வை விட்டு நான் வெளியேற வேண்டும் என்கிற இவர்களின் பேராசை இந்த இழி செயலை செய்ய வைத்துள்ளது! அந்த அளவுக்கு நமது எழுத்தும் , பேச்சும் இவர்களின் முகத்திரையை கிழித்து பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது . என்பது இதன் மூலம் தெரிய வருகிறது!
கெட்டிக் காரனின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு ? நான் உம்ராவில் இருந்து வந்ததும் உண்மை வெளியாகி எனக்கும் பாக்கருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிய வந்தால், நம்முடைய ஆதரவாளர்களே நம்மை கேவலமாக பார்ப்பார்களே என்ற எண்ணம் கிஞ்சித்தும் இல்லாமல் இவர்களால் எப்படி இது போன்ற பொய்களை எழுதவும் பரப்பவும் முடிகிறது? அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பாத அரசியல்வாதிகள் கூட இது போன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதில்லை ! கருணாநிதி கூட 1990-இல் ஜெயலலிதா எழுதிய ஆனால் வெளியிடாத கடிதத்தை வெளியிட்டு கேவலப் பட்டார், ஆனால் அண்ணனோ நான் எழுதாத கடிதத்தை எழுதியதாக வெளியிட்டு கேவலப்பட்டு நிற்கிறார்.
இந்த அவதூறு விஷயம் நான் உம்ராவில் இருந்த போது எனக்கு தொலைபேசி மூலம் தகவல் வந்தது ! நான் மிகுந்த மன வேதனை கொண்டு காஃபாவில் நின்று கை ஏந்தினேன், எப்படி நபி ஸல் அவர்கள் ஒட்டக குடலை சுமந்து கொண்டு கைஎந்தினார்களோ அதே போன்று அதே காஃபாவில் நின்று "யா அல்லாஹ் ! இந்த அவதூறு பரப்பியோரை
நீ பார்த்துக் கொள்" என்று அவனிடம் ஒப்படைத்து விட்டு வந்துள்ளேன்!
தாமதமானாலும் அல்லாஹ்வின் தண்டனை கடுமையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை!
மேலும் இணையத் தளத்தில் மட்டுமின்றி இந்த போர்ஜரி கடிதத்தை ஜெராக்ஸ் எடுத்து பரப்பிக் கொண்டுள்ளனர், மேலும் இது குறித்து த,த,ஜ வினர் உள்பட பல சகோதரர்கள் நம்மிடம் விளக்கம் கேட்டனர்,கேட்கும் அனைவருக்கும் நான் சொல்வதெல்லாம் ' இந்த கடிதத்தை எழுதியவன் , திருத்தியவன் , வெளியிட்டவன் , பரப்பியவர்கள் அத்தனை பேர் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் ! என பிரார்த்தியுங்கள் அது போதும் ' எனக் கூறியதை அடுத்து 'அவர்களின் ஆதரவாளர்கள் கூட இந்த விசயத்தில் வருந்துகின்றனர், மேலும் எனக்கும் சகோதரர் எஸ்,எம்,பாக்கர் அவர்களுக்கும் எந்த பிணக்கோ கோபமோ இல்லை என்றும் , தொடர்ந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டுள்ளேன் என்பதையும் இன்ஷா அல்லாஹ் இவர்களை தோலுரிக்கின்ற வேலை தொடரும் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவண் : செங்கிஸ் கான்,
மாநில செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்


Wednesday, 8 June 2011

முஸ்லிம் மதகுருக்களுக்கு தடை விதித்த விமானி

அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் என்ற நகரத்திலுள்ள பல்கலைக்கழகத்தில்அரபி மொழி ஆசிரியராக வேலை பார்ப்பவர் மசூதுர் ரஹ்மான், இவரது மற்றொரு முஸ்லிம் மதகுரு நண்பரும், கரோலினா என்ற இடத்திற்கு செல்வதற்காக அட்லாண்டிக் சவுத்ஈஸ்ட் ஏர்லைன்ஸ் என்ற விமானத்தில் டிக்கெட் வாங்கியிருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 4/5/11 அன்று விமானத்தில் ஏறச் செல்லும்போது அவர்கள் அதில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது. விமானத்தின் பைலட் அவர்களை ஏற்றுவதற்கு உத்தரவு அளிக்காததால் அவர்கள் அதில் பயணிக்காமல் திரும்ப அனுப்பப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு டெல்டா ஏர்லைன்ஸில் மாற்று டிக்கெட் கொடுக்கப்பட்டு அதில் பயணம் செய்தனர்.இந்த சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்தைச் சார்ந்த ஆலன் தெரிவித்துள்ளார். முஸ்லிம்கள் தாடி வைத்திருந்தால் அவர்களை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க பைலட்கள் மறுப்பது முஸ்லிம்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் : dailymuslimnews.blogspot.com/

 

Saturday, 4 June 2011

காவித் தீவிரவாதத்திலிருந்து திசை திருப்பவே 5 ஸ்டார் சத்தியாகிரகம் : திக்விஜய் சிங்!

பாபா ராம்தேவ் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங், யோகா குரு பாபா ராம்தேவ் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது 5 நட்சத்திர சத்தியாகிரகம் போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காவித் தீவிரவாதத்தில் இருந்து மக்களின் கவனத்தை திருப்ப, ஆர்எஸ்எஸ் மற்றும் விஎச்பி ஆதரவுடன் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார் என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்று திக் விஜய் சிங் கூறினார்.

இத்தகைய போராட்டத்தை ஊக்கப்படுத்துவதன் மூலம் ஆர்எஸ்எஸ், விஎச்பி அமைப்புகள், அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை இல்லாமலாக்க முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. ஜெட் விமானத்தில் பறக்கும் பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறியது திக் விஜய்சிங், காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம் என்றும் திக்விஜய் சிங் கூறினார்.
நன்றி : இந்நேரம்.காம்
தகவல் : அப்துல்லாஹ்  

முஸ்லிம் மக்களின் கவனத்திற்கு.........

தமிழ்நாட்டில் ஜுன் முதல் டிஸம்பர் மாதத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அதில் "மதம்" என்ற கேள்விக்கு "இஸ்லாம்" என்று குறிப்பிடவும்.... "முஸ்லிம்" என்பது பதிவது தவறு.

இன்னும் "ஜாதி" என்ற கேள்விக்கு பின் வருபவற்றில் ஏதேனும் ஒன்றை குறிப்பிடவும்...
·        லெப்பை
·        ஸெய்யது
·        தக்கனி முஸ்லிம்
·        அன்ஸார்
·        ஷேக்
·        மாப்பிள்ளை
·        துத்திகோலா

 முக்கிய குறிப்பு:

     ராவுத்தர், மரைக்காயர் உள்ளிட்டோரும் "லெப்பை" என்றே குறிப்பிடவும். ஜாதியை குறிப்பிடும்போது "ஸாயிபு, பட்டாணி, ஷரீப், பரிமா"  என்றெல்லாம் குறிப்பிடாதீர்கள். இத்தகவலை தங்களூர் நிர்வாகிகளிடம் (நட்டன்மை & பஞ்சாயத்) தெரிவித்து ஊர் மக்கள் பயனடைய ஆவன செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்.
-முஹம்மது முனீர்

துணைத் தலைவர்

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்