Friday, 22 April 2011

ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் அரசு

   ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒவ்வொரு வகையான கொள்கை கோட்பாடுகள், சடங்குகள்- சம்பிரதாயங்கள் இருக்கலாம் அது தவறென்று கூறமுடியாது. ஆனால் ஒரு மதத்தின் கோட்பாட்டை அனைத்து மக்கள் மீதும் திணிக்கும் செயல் ஆரோக்கியமானது அல்ல. அதிலும் குறிப்பாக வெகுஜன மக்களின் பிரதிநியான அரசே அத்தகைய செயலை முன்னின்று செய்வது புரியாத புதிராக உள்ளது. மகாவீர் அவர்கள் புலால் உண்ணாமை கொள்கையை கொண்டவராக இருந்திருக்கலாம். அவரை ஏற்றுக்கொண்ட மக்களும் மகாவீர் தினத்தன்று புலால் உண்ணாமல் இருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விருப்பமாகும். அதை யாரும் தடுக்கமுடியாது. அதே நேரத்தில் மகாவீர் தினத்தன்று ஒட்டுமொத்தமாக இறைச்சிகள் வெட்டவும் விற்பனை செய்யவும் அரசு தடை விதிப்பது ஒருவரின் கோட்பாட்டை மற்றவர் மீது திணிப்பதற்கு ஒப்பாகும். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு உத்தரவின்படி சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் 16 ம் தேதி மூடப்படும். இதே போல் ஆடு மாடு மற்றும் இதர இறைச்சி விற்பவர்களும் அவர்களது கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும்.இந்த உத்தரவை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒவ்வொரு மதத்தையும் திருப்தி படுத்துவது அரசின் நோக்கமாக இருக்குமானால், ஒவ்வொரு மதத்தவரும் தமது குருவின் கொள்கையை ஒரு குறிப்பிட்ட நாளில் அமுல்படுத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்னாகும் என்பதை அரசு சிந்தித்து பார்க்கவேண்டும். எனவே அரசு இது விஷயத்தில் நல்லமுடிவை எட்டவேண்டும். தமிழகத்தில் ஒரு சதவிகிதம் அளவு வாழும் ஒரு சமுதாயத்திற்காக 99 சதவிகித மக்களையும் அம்மதத்தின் கோட்பாட்டை ஏற்கவேண்டும் என்று சட்டம் போடுவது அரசின் அறியாமையாகும். இப்படி சட்டம் போடும் அரசு, ரமலான் மாதம் முழுவதும் பகலில் பட்டினி கிடக்கும் முஸ்லிம்களைப் போல் மற்றவர்களும் பட்டினி கிடக்கவேண்டும் என்று கூறுமா? எனவே இதுபோன்ற திணிப்புகளை அரசு கைவிட வேண்டும்.
அதே நேரத்தில் காந்தி ஜெயந்தியன்று மதுக்கடைகள் மூடப்படுவது வரவேற்க்கத்தக்கதே! ஏனெனில் மது மனித குலத்தை நாசமாக்கும் மெல்லக்கொல்லும் விஷமாகும். எனவே காந்தி ஜெயந்தியன்று மட்டும் என்றில்லாமல் பூரண மதுவிலக்கை கொண்டுவர அரசு முயற்ச்சிப்பது தான் காந்திக்கு அரசு செலுத்தும் மரியாதையாகும். அரசு

Monday, 4 April 2011

வக்பு வாரியங்கள்

வக்பு சொத்துகளை செயல்திறனுடன் நிர்வகிக்க மிகப்பெரிய சீர்திருத்தங்கள் தேவை
 
பெருமளவு ஆக்கிரமிப்பு, முறைகேடு, கவனிப்பின்மை ஆகியவற்றால் பாதிக்கப் பட்டுள்ள வக்பு வாரிய சொத்து களை நிர்வகிப்பது கவனத்துக் குரிய விஷயமாகியுள்ளது. இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உள்ளன. அதையும் சுருக்கமாகப் பார்ப்போம். அதற்கு முன்பு முக்கியப் பங்கு வகிக்கும் சட்ட மற்றும் நிர்வாகரீதியான பலவீனங்களைப் பேசவேண்டும். இதனால் இந்த நாட்டிலுள்ள வக்பு வாரியத்துக்குச் சொந்தமான சொத்துகள் அபிவிருத்தி செய்யப்படாமலேயே உள்ளன. வக்பு வாரியத்தின் அமைப்பு ஒழுங்கும் இதற்கு உதவவே இல்லை.

இரக்கமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து  இந்த  அமைப்பை உருவாக்கினார் கள். இதன் பயன்கள் அனைத்தும் மத, தர்ம மற்றும் கல்வி காரியங்களுக்குப் பயன் படவேண்டும்.
மைய அரசுச் சட்டப்படி வக்பு  சொத்துகள் மாநில வக்பு வாரியங்களால் நிர்வகிக்கப்பட வேண்டும். அது அரசியல்ரீதியான செயல்முறையில் நடக்கும். சிலசமயம் மாநில அரசு நியமிக்கும் ஒருவரால் நிர்வகிக்கப்படும்.
இந்த அமைப்பின் உடைமைகளை நிர்வகிப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்கள் கீழ்கண்டவாறு சுருக்கப் பட்டுள்ளன.
பெரிய அளவிலான ஆக்கிரமிப்பு: 1947 பிரிவினை ஏற்பட்டு பெருவாரியான மக்கள் இடம்பெயர்ந்தபோது, அப்போது நகரங்களில் குடிபெயர்ந்த மக்கள் இந்த உடைமைகளை ஆக்கிரமித்தார்கள். அதற்குப் பின்னர் பல ஆண்டுகளுக்கு இந்த ஆக்கிரமிப்பைத் தடுக்க எந்த அமைப்பும் இல்லை.
அரசு மற்றும் அரசுசார் அமைப்புகளின் ஆதிக்கம்: அரசுத் துறைகளாலும் பல உடைமைகள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. குறைவான வாடகை அல்லது வாடகையே தராமல் இந்த அலுவலகங்கள் இயங்குகின்றன.
 குறைந்த வாடகை: பல ஆண்டுகளுக்கு முன்பு அலுவலகங் களாகவும் வீடுகளாகவும் பயன்படுத்தத் தொடங்கிய இடங்களுக்கு இன்னமும் மிகக் குறைவான வாடகையே தரப்படுகிறது.
வழக்குகள்: பல உடைமைகள் வழக்கில் உள்ளன. அவற்றிலிருந்து எந்த வருவாயும் வருவதில்லை.
பலவீனமான வாடகைதாரர் சட்டம்: இந்தச் சட்டம் வீட்டு உரிமையாளர்களைவிட வாடகைக்கு இருப்பவர்களுக்கே சாதகமாகத் திகழ்கிறது. அத்துடன் சிவில் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் சுமையும் அதிகமாக உள்ளது.
வக்பு சட்டத்தின் பிரச்னைகள்: 1) இந்தச் சட்டத்தின்படி நீண்டகால குத்தகை அனுமதிக்கப்படுவதில்லை. நீண்டகால குத்தகைக்குக் கொடுக்கப்படாவிட்டால் நல்ல லாபம் இருக்காது. 2) இந்த அமைப்பின் சொத்துகள் பொது இடங்கள் சட்டத்தின் கீழ்வருவதில்லை. 3) இதனால் கூடுதல் டிவிஷனல் மாஜிஸ்திரேட்டை எஸ்டேட் அதிகாரியாக நியமித்து ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றலாம் 4) வக்பு சொத்துகளைக் கணக்கிட்டு ஆய்வு செய்யும் பணியை குறித்த காலத்தில் முடிக்க மாஜிஸ்திரேட் அந்தஸ்தில் உள்ளவரை நியமிக்க வேண்டும். 5) வழக்குகளை விசாரிப்பதற் காக மாநிலம்தோறும் வக்பு தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க வேண்டும்.
மனநிலையில் மாற்றம் தேவை
வக்பு சொத்துகளை வர்த்தக அடிப்படையில் லாபத்தைத் தருபவையாக மாற்ற புதுமையான  சிந்தனை அவசியமாக உள்ளது. நகரத்தில் உள்ள உடைமைகளைக் கொண்டு சில மாநிலங்களில் மிகப்பெரிய  முன்னேற்றம் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் வருவாயில் கல்விக்கான உள்கட்டமைப்பு மற்றும் தொழில்கல்வி மையங்களை முஸ்லிம் சமூகத்துக்கு உருவாக்கலாம். இதற்கு உதாரணங்களாக கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்கள் உள்ளன. வட இந்தியாவில் உள்ள மனப்போக்கு மிகவும் பழைமையானது. இதனால் வர்த்தக நோக்கு இல்லாமல் உள்ளது.
மத்திய வக்பு சபைக்கு கூடுதல் அதிகாரங்களை அளித்து வலுப்படுத்தி மாநில வாரியங்களைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் தேவை. நலிந்த வக்பு வாரியங்களை தூக்கி நிறுத்த கடன்களும் நிதியுதவிகளும் வழங்கவேண்டும்.  தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். இந்த மாதிரியான சட்டரீதியான நிர்வாகரீதியான அபிவிருத்திகளால் மாநில வாரியங்களுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்த முடியும்.       
(இக்கட்டுரையில் உள்ள கருத்துகள் எழுத்தாளருடைய சொந்தக் கருத்துகள்) 
 தகவல் :- The sunday Indian   
படங்கள் : INTJ - Pernambut